பொலுத்தீன் பைக்கற்றுக்குள் கசிப்பினை அடைத்து விற்பனை செய்த இருவரை கோப்பாய் பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்படி திடீர் சோதணை நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியிருந்தனர்.
சந்தேகத்திற்கிடமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற இருவரை வழிமறித்த பொலிஸார் அவர்களை சோதணைக்கு உட்படுத்தினர்.
அப்போது குறித்த இரு சந்தேக நபர்களிடமிருந்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கசிப்பினை போலீசார் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 6 லிட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.சிறிய சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்