மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!! -தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் சம்பவம்- - Yarl Thinakkural

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!! -தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் சம்பவம்-

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் மண்டபம் கழுவிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் துர்க்காபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான சண்முகராஜ் செந்தூரன் (வயது-51) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. அதன்போது குடும்பத்தலைவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

சம்பவத்தையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post