உயிரியல் கற்பதற்கேற்ற பெறுபேறு கிடைக்கவில்லை!! -முல்லையில் மாணவி தற்கொலை- - Yarl Thinakkural

உயிரியல் கற்பதற்கேற்ற பெறுபேறு கிடைக்கவில்லை!! -முல்லையில் மாணவி தற்கொலை-

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ளாததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் .

மாணவியின் இறப்பால் சிலாவத்தை கிராமமும் பாடசாலை சமூகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடந்த இச் சம்பவத்தில் சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற சந்திரன் கம்சிகா (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்தவராவார். 

நேற்று க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அப்பரீட்சையில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் தான் கல்வி கற்பதற்காக பெறுபேற்றை குறித்த மாணவி எதிர்பார்த்திருந்தார்.

இருப்பினும் தனக்கு உயிரியல் படிப்பினை மேற்கொள்ள போதுமான பெறுபேறு கிடைக்காததால் என்ற ஆதங்கத்தில் குறித்த மாணவி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம்  குறித்து முல்லைத்தீவு  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post