வடகொரிய ஜனாதிபதி கிம் மரணம்!! - Yarl Thinakkural

வடகொரிய ஜனாதிபதி கிம் மரணம்!!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய அதிபர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதன் பின்னர் இதுவரையில் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் வடகொரியா, தமது அதிபரின் மறைவு தொடர்பிலோ அல்லது உடல்நிலை தொடர்பிலோ இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, வடகொரியாவில் நடைபெற்ற முக்கிய அரச நிகழ்வொன்றில் அதன் தலைவர் கிம் ஜொங் உன் கலந்துக்கொள்ளாத நிலையில், தென்கொரியா மற்றும் சீன அதிகாரிகள் அவரின் உடல் நிலை குறித்து சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், மூன்றாவது தலைமுறையாக வடகொரியாவை நிர்வகிக்கும் 36 வயதான கிம் ஜொங் உன்னிற்கு பின்னர் எவர் அரச நிர்வாகத்தை பொறுப்பேற்பார் என்பது குறித்து ஊடகங்கள் அறிக்கைகளை விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு முதல் பதவியில் உள்ள கிம் பரம்பறையில் தற்போது பொறுப்பை ஏற்கக்கூடிய ஒருவர் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியாக பல எதிர்ப்புக்கள் வந்துள்ள நிலையில் பொருத்தமான தலைவர் ஒருவர் அவசியம் என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், கிம் ஜொங் உன்னின் இளைய சகோதரி இந்த பதவியை ஏற்பதற்கு தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிர்வாகத்தில் உள்ள தொழிலாளர் கட்சியின் பிரதி இயக்குனராக அவர் 2 வருடங்கள் பணியாற்றியுள்ளதுடன் மத்திய குழுவுடனும் தொடர்பினை கொண்டுள்ளார்.

இது தவிர உத்தியோக பற்றற்ற முறையில் சகோதரர் கிம் ஜொங் உன்னின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post