முப்படைகளின் தனிமைப்படுத்தும் நிலையமாக கேப்பாய் கல்வியற் கல்லூரி!! - Yarl Thinakkural

முப்படைகளின் தனிமைப்படுத்தும் நிலையமாக கேப்பாய் கல்வியற் கல்லூரி!!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படைகளின் தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகப்படும் முப்படைகளைச் சேர்ந்த 77 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த கல்லூரியில் உள்ள மாணவர்களின் இரண்டு விடுதிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுமுறையில் வீடுகளுக்குச் சென்ற முப்படைகளையும் மீண்டும் தத்தமது படைமுகாங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவித்ததை அடுத்து, யாழ்.மாவட்டத்தில் உள்ள படைமுகாங்களில் இருந்து வீடுகளுக்கு சென்றுவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு இங்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என்று இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post