எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாய நிகழ்வு!! -பிரதமர் மஹிந்த கலந்து கொண்டார்- - Yarl Thinakkural

எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாய நிகழ்வு!! -பிரதமர் மஹிந்த கலந்து கொண்டார்-

நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெலியத்தை அபிநவாராமை விகாரையில் இன்று புதன்கிழமை எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார்.

முற்பகல் 9.17 எனும் எண்ணெய் தேய்ப்பதற்கான சுபநேரத்தில் அபிநவாராமாதிபதி போலானே ஆனந்ததேரர் பிரதமருக்கு சம்பிரதாயப்படி எண்ணெய் தேய்த்துவிட்டார்.

சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடித்து இந்த நிகழ்வில் சிரந்தி ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லிமினி வீரசிங்க ராஜபக்ச ஆகியோர் இணைந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் விகாரையில் சமய வழிபாடுகளிலும் கலந்துக்கொண்டார்.

Previous Post Next Post