யாழில் திருட்டுத்தனமாக மதுபான விற்பனை!! -அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மதுவரி திணைக்களம்- - Yarl Thinakkural

யாழில் திருட்டுத்தனமாக மதுபான விற்பனை!! -அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மதுவரி திணைக்களம்-

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைகளில் உள்ள இருப்புகள் கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக ( சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சத்தால் தொடர் ஊடரங்கு அமுலில் உள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபான சாலைகளைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான சாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக யாழ்ப்பாணத்தில் மதுபான சாலைகளில் உள்ள மதுபானங்களின் இருப்புக் கணக்கெடுக்கப்பட்டு முத்திரையிடப்படுகின்றன. இந்தப் பணி இன்று வலிகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மறு அறிவிப்புவரை மதுபான சாலைகளை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாகவே மதுவரித் திணைக்களத்தினரால் மதுபான சாலைகளுக்கு முத்திரையிடப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post