கொரோனாவை கணக்கில் எடுக்காத வடகொரியா!! -இன்றும் ஏவுகணை பரிசோதனை- - Yarl Thinakkural

கொரோனாவை கணக்கில் எடுக்காத வடகொரியா!! -இன்றும் ஏவுகணை பரிசோதனை-

கொரோனா வைரஸ் காரணமாக உலகில் உள்ள பல நாடுகள் இடர்பாடுகளை சந்தித்துவரும் நிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.

வடகொரியாவின் கிழக்குப் பகுதி நகரமான மன்சோன்னில் உள்ள கடல் பகுதியில் ஏவுகணை சோதனையை காலை 7 மணியளவில் நடத்தியது. வடகொரியா ஏவிய ஏவுகணை 150 கிலோ மீற்றர் தூரம் சென்ற பின்னர் கடலில் விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஏவுகணைகள் கப்பல்களைத் தாக்கும் ஆற்றல் கொண்டவை என்று தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது
Previous Post Next Post