திருநெல்வேலியிலும் கிருமி நீக்கி விசிறப்பட்டது!! - Yarl Thinakkural

திருநெல்வேலியிலும் கிருமி நீக்கி விசிறப்பட்டது!!

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் கிருமி நீக்கும் மருந்து விசிறும் பணிகள் இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள சந்தை, வியாபார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த பணி முன்னெடுக்கப்பட்டன.

கொரோனா தாக்கத்தால் நாட்டில் எழுந்துள்ள அசாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இதன்படி கொழும்பில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு வரவளைக்கப்பட்ட விசேட பொலிஸ்குழுவினர் குடாநாடு முழுவதும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று புதன்கிழமை காலை யாழ்.திருநெல்வேலியில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post