சுவிஸ் போதகருடன் தொடர்பா? மறைந்திருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்!! -வடக்கு சுகாதார பணிப்பாளர் அவசர கோரிக்கை- - Yarl Thinakkural

சுவிஸ் போதகருடன் தொடர்பா? மறைந்திருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்!! -வடக்கு சுகாதார பணிப்பாளர் அவசர கோரிக்கை-

சுவிஸ் மத போதகருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அரியாலை தேவாலாயத்தில் நடந்த போதனையில் கலந்து கொண்டும், இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு செல்லாதவர்கள் உடனடியாக தாமாக வைத்திய சாலைக்கு சென்று தங்களை அடையாளப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதிஸ்வரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சுவிஸ் மத போதகருடன் தொடர்பில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

எனவே தங்களையும், தங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாப்பதற்கான மறைந்திருப்பவர்கள் வெளியில் வந்து, வைத்திய சாலையில் பரிசோதணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Previous Post Next Post