ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களுக்கு யாழில் அஞ்சலி!! - Yarl Thinakkural

ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களுக்கு யாழில் அஞ்சலி!!

இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு ஈஸ்டர் தாக்குதில் ஓராண்டு நினைவு அஞ்சலி வழிபாடு யாழ் ஆயர் இல்லத்தில் இன்று செவ்வாய் கிழமை காலை இடம்பெற்றது.

யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை 8.45 மணிக்கு இந்த நினைவேந்தல் வழிபாடு இடம்பெற்றது.

இந் நினைவேந்தல் வழிபாட்டில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார் உள்ளிட்ட மதகுருமார்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றிலிருந்து நாட்டு மக்கள் மிக விரைவில் மீள வேண்டுமென்றும் பிராத்தனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post