இந்திய தமிழகத்தை சேர்ந்தவர் யாழில் சாவு!! -இறப்பு விசாரணைகள் ஆரம்பம்- - Yarl Thinakkural

இந்திய தமிழகத்தை சேர்ந்தவர் யாழில் சாவு!! -இறப்பு விசாரணைகள் ஆரம்பம்-

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் மணி (வயது 36) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த குடும்பத் தலைவர் இனுவில் பகுதியில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தலையில் கட்டி உள்ளதாக கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

Previous Post Next Post