கம்போடியாவில் இருந்து வந்தவர் மந்திகையில் திடீர் சாவு!! -கொரோனா சந்தேகத்தில் பரிசோதணை ஆரம்பம்- - Yarl Thinakkural

கம்போடியாவில் இருந்து வந்தவர் மந்திகையில் திடீர் சாவு!! -கொரோனா சந்தேகத்தில் பரிசோதணை ஆரம்பம்-

உடல் நலக்குறைவால் மந்திகை வைத்தி சாலைக்குக் சிகிச்சைக்காக இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கொண்டுவரப்பட்டனர் திடீரென உயிரிழந்தள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கம்பொடியா நாட்டில் சென்று திரும்பி வந்தவர் என்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் சடலத்தில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதணைகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.சேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவர் வீசிங் நோயாளி.  கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post