பொன்னாலை தரவை காட்டிற்குள் கசிப்பு உற்பத்தி நிலையம்!! -இளைஞர்களுடன் பொலிஸ் இணைந்து அதிரடி முற்றுகை- - Yarl Thinakkural

பொன்னாலை தரவை காட்டிற்குள் கசிப்பு உற்பத்தி நிலையம்!! -இளைஞர்களுடன் பொலிஸ் இணைந்து அதிரடி முற்றுகை-

பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் மிக நீண்ட நாட்களால் இரகசியமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிடப்பட்டது.

அப்பகுதி இளைஞர்கள் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸார் இணைந்தே இந்த அதிரடி முற்றுகை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இருப்பினும் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில், காய்ச்சப்பட்ட கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post