யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!! - Yarl Thinakkural

யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!!

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி முழங்காவில் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தார்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்களுக்கு கடந்த 13 ஆம் திகதி பரிசோதணை நடத்தப்பட்ட போது, அப் பெண்ணின் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பெண் நேற்று யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு இன்று நடத்திய பி.சி.ஆர் பரிசோதணையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.

Previous Post Next Post