யாழ் நகரில் கொரோனா அமளிக்குள் சமூக சீரழிவு!! -வீடு முற்றுகை: இரு பெண்கள் கைது- - Yarl Thinakkural

யாழ் நகரில் கொரோனா அமளிக்குள் சமூக சீரழிவு!! -வீடு முற்றுகை: இரு பெண்கள் கைது-

யாழ்.நகரப் பகுதிக்கு மிக அண்மையில் சமூக சீரழிவு நடைபெற்ற வீடு ஒன்று பொலிஸாரால் சற்று முன் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அங்கிருந்து வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பெண்கள் இருவரையும் அந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினார். அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

Previous Post Next Post