அம்பாறையில் முதல் கொரோனா நோயாளி!! -கட்டாரில் இருந்து வந்தவராம்- - Yarl Thinakkural

அம்பாறையில் முதல் கொரோனா நோயாளி!! -கட்டாரில் இருந்து வந்தவராம்-

அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரோனா நோயாளி அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று 19ஆம் வட்டாரம் காசிமாதி வீதியில் உள்ள வீட்டிலேயே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 16ஆம் திகதி கட்டாரில் இருந்து குறித்த நபர் உட்பட 7 பேர் அக்கரைப்பற்றுக்கு வருகைதந்துள்ளனர். குறித்த 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் பூர்த்தியானதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர்களுடன் தனிப்படுத்தலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு சோதனையின் பின்னர் கொரனா தொற்று உள்ளது இனங்காணப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியை சேர்ந்த 7 பேருக்கும் நேற்று முன்தினம் கொரனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post Next Post