நாளை மின்வெட்டு இல்லை!! - Yarl Thinakkural

நாளை மின்வெட்டு இல்லை!!

வடக்கு மாகாணத்;தில் உள்ள 5 மாவட்டங்களிலும் நாளை மின்வெட்டு என்று வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று வடமாகாண மின்சார சபை காரியாலயத்தின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

நாளை வியாழக்கிழமை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணம் முழுவதிலும் மின்வெட்டு நடமுறைப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருப்பினும் இன்று இரவு வரை மின்வெட்டுத் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் வெளியாகியிருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மின்சாரசபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டிருந் தபோது அது ஒரு வதந்தி என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Previous Post Next Post