இடர் காலத்தில் பொய் தகவல் வெளியிடும் ரட்ணஜீவன் கூல்!! -நடவடிக்கை எடுக்க கோரும் யாழ்.அரச அதிபர்- - Yarl Thinakkural

இடர் காலத்தில் பொய் தகவல் வெளியிடும் ரட்ணஜீவன் கூல்!! -நடவடிக்கை எடுக்க கோரும் யாழ்.அரச அதிபர்-

இடர் காலப்பகுதியில் பொய்யான தகவல்களை வெளியிடும் தேர்தல் ஆணைக்குவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் மீது விசாரணை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளேன் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

சற்றுமுன் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடையாளிகளால் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்படும் உதவிப் பொருட்களை முன்னாள் அமைச்சர் அங்கஜன் இராமநாதனுக்கு வழங்கும்படி நான் உத்தரவிட்டதாக தேர்தல் ஆணைக்குவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் பொய்யான தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மாவட்டச் செயலகத்திற்கு வந்த நிவாரணப் பொருட்களை அரசியல்வாதிக்கு வழங்குமாறு நான் கூறவில்லை. எனவே இக் கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளேன் என்றார்.

Previous Post Next Post