கொரோனாவா? ஆழியவளை பெண் வைத்திய சாலையில்!! -மகனை பார்க்க அவுஸ்திரேலியா சென்றவராம்- - Yarl Thinakkural

கொரோனாவா? ஆழியவளை பெண் வைத்திய சாலையில்!! -மகனை பார்க்க அவுஸ்திரேலியா சென்றவராம்-

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியினைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோணா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அண்மையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகனிடம் சென்று நாடு திரும்பியுள்ளார். இங்கு வந்த அவர் தனது வீட்டிலேயே பொலிஸ் மற்றும் இராணுவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நிலையில் அவருக்கு இன்று திடீரென ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக மருதங்கேணி பிரதேச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட அவர் மோலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Previous Post Next Post