கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க கூடும்!! -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை- - Yarl Thinakkural

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க கூடும்!! -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை-

நாட்டில் எதிர்வரும் தினங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்படுபவர்கள் அதிகரிக்கக் கூடும் என்று அசர மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.

களுத்துறையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே குறித்த சங்கத்தின் கதவி செயலாளர் மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ஏனைய தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறி ஏற்படும் நாட்களின் கணிப்பின்படியே எதிர்வரும் சில தினங்களில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று அச் சங்கத்தினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Previous Post Next Post