கொரோனா ஆபத்தை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடர்!! -வியப்பில் விஞ்ஞானம்- - Yarl Thinakkural

கொரோனா ஆபத்தை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடர்!! -வியப்பில் விஞ்ஞானம்-

கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந் கொரோனா வைரஸால் வரப்போகும் ஆபத்து தொடர்பில் கடந்த ஆண்டே கணித்து கூறியமை உலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனால் அந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019-ம் ஆண்டிலேயே கணித்து கூறியவர்.

இவரது பெயர், அபிக்யா ஆனந்த். கர்நாடகாவைச் சேர்ந்தவர். பிறந்தது, 2006-ம் ஆண்டு. இவரது தந்தை ஆனந்த் ராமசுப்ரமணியன். தாய் அனு ஆனந்த். அபிக்யாவிற்கு, அபிக்தியா என்ற தங்கை உள்ளார்.

ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ள அபிக்யா, சிறுவயதிலிருந்தே அது சார்பான பல படிப்புகளை ஆர்வமாக படித்தார். வேதங்களை கற்று உணர்ந்தவர். இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.

இவர் 2015-ம் ஆண்டில் இருந்து ‘கான்சைன்ஸ்’ என்ற யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார். அதில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப்பூர்வமாக பேசுவது, அபிக்யாவின் ஸ்டைல்.

அப்படித்தான், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்ட வீடியோவில், 2020-ம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கி இருந்தார்.

கொரோனா பற்றியும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டிருந்தது. கொரோனா வைரஸோடு சேர்த்து, உலக பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கும் என முன்பே கணித்துவிட்டார். அதோடு கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த குட்டி ஜோதிடருக்கு பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றன. 2015-ம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016-ம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தது. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும், இந்த குட்டி ஜோதிடரின் யூ-டியூப் சேனலை இன்று ஏராளமானோர் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
Previous Post Next Post