கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழியும் ஜ.டி.எச் வைத்திய சாலை!! -மேலும் வசதிகள் தேவை என்கிறார் ஆனந்த விஜேவிக்ரமா- - Yarl Thinakkural

கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழியும் ஜ.டி.எச் வைத்திய சாலை!! -மேலும் வசதிகள் தேவை என்கிறார் ஆனந்த விஜேவிக்ரமா-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் ஜ.டி.எச் சிறப்பு வைத்திய சாலை நிரம்பி வழிகின்றது என்று குறித்த வைத்திய சாலை வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமா தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்திய சாலையில் 120 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் உள்ளன.

இருப்பினும் தற்போது அங்கு 150 கொரோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த 25 பேர் அங்கிருந்து வெளியேறுவதற்கான இறுதி மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்காததால் வைத்திய சாலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்குள்ள சிலரை வேறு வைத்திய சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த வைத்திய சாலைக்கு மேலதிக நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Previous Post Next Post