“கொரோனா-கோவிட்” இரட்டை குழந்தைகளுக்கு பெயர்வைத்த பெற்றோர்!! - Yarl Thinakkural

“கொரோனா-கோவிட்” இரட்டை குழந்தைகளுக்கு பெயர்வைத்த பெற்றோர்!!

சதீஸ்காரில் தமக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா - கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் ஊரடங்கை அறிவித்து உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சதீஸ்காரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயரிட்டுள்ளனர்.

எனினும் தம்பதியினர் பின்னர் தங்கள் முடிவை மாற்றி தங்கள் குழந்தைகளுக்கு மறு பெயரிடலாம் என்று கூறினர். இந்த இரண்டு சொற்களும் மற்றவர்களின் மனதில் அச்சத்தையும் பேரழிவையும் உருவாக்ககூடும்.

ஆனால் ராய்ப்பூர் தம்பதியினர் தங்கள் இரட்டை குழந்தைகளான ஒரு பையன் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் கஸ்டங்களை வென்றெடுப்பதை அடையாளப்படுத்தும் வகையில் கொரோனா - கோவிட் எனபெயரிட்டுள்ளனர்.
Previous Post Next Post