சுவிஸ் போதகரின் ஆதாரணையில் பங்கெடுப்பு!! -உண்மையை மறைத்து வட்டுக்கோட்டையில் ஒழிந்திருந்த குடும்பம் முற்றுகை- - Yarl Thinakkural

சுவிஸ் போதகரின் ஆதாரணையில் பங்கெடுப்பு!! -உண்மையை மறைத்து வட்டுக்கோட்டையில் ஒழிந்திருந்த குடும்பம் முற்றுகை-

யாழ்.அரியாலைப் பகுதியில் சுவிஸ் மத போதகர் நடத்திய ஆராதனையில் கலந்து கொண்டு உண்மையை வெளிப்படுத்தாமல் ஒழிந்திருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.அரியாலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலையத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மதபோதகர் ஒருவர் ஆராதணை நடத்தியிருந்தார்.

குறித்த ஆராதணை நடத்திய சுவிஸ் மத போதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

குறிப்பாக தாவடி, அரியாலை மற்றும் பலாலி பகுதிகளில் அவரவர் வீடுகளிலும், தனிமைப்படுத்தல் முகாங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இருப்பினும் தாங்கள் குறித்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போதும், அந்த உண்மையை வெளிப்படுத்தாமல் இருந்த ஒரு குடும்பம் வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்டது.

அந்த குடும்பத்தில் உள்ள 10 பேரும் உடனடியாக இராணுவம், சுகாதாரத்துறையினருடைய கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
Previous Post Next Post