கொரோனாவில் இருந்து மீண்ட யாழ் வாசிகள் இருவர்!! -நாளை வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை- - Yarl Thinakkural

கொரோனாவில் இருந்து மீண்ட யாழ் வாசிகள் இருவர்!! -நாளை வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்துள்ளனர். அவர்கள் நாளை வைத்திய சாலையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

நாளை வீடுகளுக்கு வரும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் இருப்பார்கள் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார். 

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ளவர்களிடம் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக  சுவிஸ் மத போதகருடன் தொடர்பில் இருந்த நிலையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக சிறப்பு வைத்திய சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அதில் இருவரே பூரண குணமடைந்துள்ளதாகவும், நாளை அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

Previous Post Next Post