நாய்க்கு கொரோனா!! -ஜாஎல பகுதியில் புதிதாக எழுந்துள்ள ஆபத்து- - Yarl Thinakkural

நாய்க்கு கொரோனா!! -ஜாஎல பகுதியில் புதிதாக எழுந்துள்ள ஆபத்து-

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் தொகை அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில் முதல் முதலாக நாய் ஒன்றுக்கு குறித்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குளான மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர். இதையடுத்து நாட்டில் தொற்றுக்குள்ளானோர் 420 ஆக உயர்ந்துள்ளது.

ஜாஎல சுதுவெல்ல பகுதியில் நாய்  ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று முதல் முறையாக இனங்காணப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கொங்கொங் போன்ற நாடுகளில் பூனைகள், நாய்களுக்கு தொற்று அறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post