நாடு வழமைக்கு திரும்ப வேண்டும்!! -அதன் பின்னே தேர்தல்: மஹிந்த தேவப்பிரிய- - Yarl Thinakkural

நாடு வழமைக்கு திரும்ப வேண்டும்!! -அதன் பின்னே தேர்தல்: மஹிந்த தேவப்பிரிய-

நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய பின்னர் 5 வார கால அவகாசத்தின் பின்பே பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :

தேர்தலை நடத்தும் தினம் குறித்து தேர்தல் ஆணைக்குழு இதுவரை தீர்மானிக்கவில்லை.தேர்தல் நடத்தப்படும் தினம் எனக்கூறி பல்வேறு வதந்திகள் பரவி வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து நிலைமைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடத் தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது” என்றார்.
Previous Post Next Post