கொழும்பில் கொரோனா அச்சம்!! -நாராஹேன்பிட்டி - ஹெவ்லொக் பகுதிகள் லொக்டவுன்- - Yarl Thinakkural

கொழும்பில் கொரோனா அச்சம்!! -நாராஹேன்பிட்டி - ஹெவ்லொக் பகுதிகள் லொக்டவுன்-

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தை அடுத்து நாரயம்பிட்டி – தாபரே மாவத்தை டொரிங்ன்டன் ஹெடேவத்தை மற்றும் ஹெலோக் வீதி போன்ற முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ரூவான் விஜேயமுனி மேற்படித் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பகுதிகளில் 4 கொரோன தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த 4 பேரில் 2 பேர் நாரேயம்பிட்டி தாபரே மாவத்தையிலும், மேலும் ஒருவர் டொரிங்டன் வத்தையிலும் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த நபர் பண்டாரநாயக்க மாவத்தையில் தங்கிருந்து சென்றுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஹெவலொக் வீதியில் மற்றுமொருவர் கண்டறியப்ப்ட்டிருந்தார்.

அவரின் பாரவூர்தியின் சாரதி பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

ஆகவே ஒருவருடன் ஒருவருக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு உள்ளது. எனவே இன்னும் நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post