யாழில் கொரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரிக்குமா? -முடிவு இன்று தெரியவரும்- - Yarl Thinakkural

யாழில் கொரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரிக்குமா? -முடிவு இன்று தெரியவரும்-

யாழ்.மாவட்டத்தின் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாரவ்களின் தொகை மேலும் அதிகரிக்குமா? இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பு இன்று என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்.பலாலி படைமுகாமில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 10 பேருக்குமான மருத்துவ பரிசோதணைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மதபோதகர் மற்றும் தாவடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேர் பலாலி படைமுகாமில் கடந்த ஒருவரத்திற்கும் அதிகமாக கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அவர்களில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் மேலதிகமாக இருந்த 10 பேருக்கும் நேற்று வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரிசோதணைகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post