சற்றுமுன் இரு கொரோனா நோயாளிகள் அடையாளம்!! - Yarl Thinakkural

சற்றுமுன் இரு கொரோனா நோயாளிகள் அடையாளம்!!

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட இருவரும் கிரான்ட்பாஸ் மற்றும் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இன்று இதுவரையில் மொத்தமாக 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post