ஆனையிறவால் யாழ் வந்தவர் வீட்டிற்கு போகாமல் மாயமானார்!! -கொரோனா அச்சத்தால் தேடுதல் தீவிரம்- - Yarl Thinakkural

ஆனையிறவால் யாழ் வந்தவர் வீட்டிற்கு போகாமல் மாயமானார்!! -கொரோனா அச்சத்தால் தேடுதல் தீவிரம்-

ஆனையிறவு சோதனை சாவடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த பெதுமன் ஒருவர் மாயமாகியுள்ளார். அவரை தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

குறித்த நபர் ஆனையிறவில் உள்ள இராணுவ சோதணைச்சாவடி ஊடாக நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

குறித்த சோதணைச்சாவடியில் அவரை சோதணையிட்ட இராணுவம் அவருடைய தேசிய அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ளதன்படி இராசா மாணிக்கம் என்ற பெயரையும், இல.81 கரவெட்டி வடக்கு என்ற முகவரியையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் குறித்த நபருடைய 527452530ஏ என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தினையும் இராணுவம் பதிவு செய்துவிட்டு அவரை யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்க அனுமதித்திருந்தது.

இருப்பினும் இன்று குறித்த நபர் அந்த முகவரியில் உள்ளாரா என்று ஆராய்ந்த போது அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் தொடர்பான தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.

இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0212263258 என்ற கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கம் ஊடாக அறிவிக்கும்படி பிரதேச செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Previous Post Next Post