“குடி” மக்கள் மதுபானம் வாங்க பாஸ்!! -அரசு வழங்குகிறது- - Yarl Thinakkural

“குடி” மக்கள் மதுபானம் வாங்க பாஸ்!! -அரசு வழங்குகிறது-

மதுவை குடிப்பதை விடமுடியாமல் தவிக்கும் குடிப்பிரியர்களுக்கு மருத்துவர்களின் சிபாரிசின் பேரில், மதுபானம் வாங்க கேரள அரசு சிறப்பு ‘பாஸ்’ வழங்குகிறது.

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 21 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் குடிப்பிரியர்கள் தவித்து வருகிறார்கள்.

குடிக்கு அடிமையானவர்கள் திடீர் என்று அதை நிறுத்துவதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு கைகால் நடுக்கம், மயக்கம், வலிப்பு, தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சிலர் தற்கொலைகூட செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக கேரளாவில் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில் குடிப் பழக்கத்தை விடமுடியாத குடிமக்களுக்கு கேரள அரசு சிறப்பு ‘பாஸ்’கள் வழங்குகிறது. இதற்கான உத்தரவு திங்கட்கிழமை இரவு பிறப்பிக்கப்பட்டது.

Previous Post Next Post