கொரோன எவ்வாறு தொற்றியது? -ஆராய்வுகள் ஆரம்பம்: சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

கொரோன எவ்வாறு தொற்றியது? -ஆராய்வுகள் ஆரம்பம்: சத்தியமூர்த்தி-

யாழ்ப்பாணத்தில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா நோயாளிகளுக்கும் எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சுவிஸ் மத போதகருடன் தொடர்பில் இருந்த 20 பேர் பலாலி படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் நடத்தப்பட்ட பரிசோதணையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்கள் அனைவரும் அங்கு ஒன்றாக விட்டதினாலேயே அவர்களுக்கிடையில் வைரஸ் தொற்று பரவியிருக்கும் என்று மக்கள் அச்சம் கொள்கின்றார்கள். ஆனால் தனிமைப்படுத்தலில் இருந்து தான் ஒருவரில் இருந்து இன்னொருவரக்கு தொற்று ஏற்பட்டதாக கூறிவிட முடியாது.

ஏனெனில் தொற்றுச் சந்தேகத்திலேயே அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றனர். ஆகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டே இருந்திருக்க வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் அங்கு அனுப்பிவைக்கப்படுகின்றார்கள்.

அகையினால் தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே அவர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளைப் பேணியிருக்க வேண்டும். ஆவ்வாறு அந்த நடைமுறைகளைப் பேண வேண்டியது அனைவரதும் கூட்டுப் பொறுப்பு ஆகும். அவர்கள் சுகாதாரப் பரிவினர் ஊடாக இரர்னுவத்தின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஆகவே இந்தக் கூட்டுப் பொறுப்பில் எந்தெந்த இடங்களில் தவறு நடந்து என்று என்னால் கூறமுடியாதுள்ளது. இது ஒரு சங்கிலித் தொடர்பைக் கொண்டது. ஆகையினால் அந்தச் சங்கிலித் தொடர்பாக கூட இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

இந்த விடயங்கள் சம்மந்தமாக சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரப் பணிமனைக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக சில தினங்களில் விசெட கூட்டமொன்றையும் கூட இருக்கின்றோம் என்றார்.
Previous Post Next Post