யாழிற்கு கஞ்சா கடத்தியவர்கள் தனி சிறையில் அடைப்பு!! -கொரோனா அச்சமே காரணம்- - Yarl Thinakkural

யாழிற்கு கஞ்சா கடத்தியவர்கள் தனி சிறையில் அடைப்பு!! -கொரோனா அச்சமே காரணம்-

யாழ்.மாவட்டத்திற்கு வடமராட்சி கடல் வழியாக கஞ்சா கடத்திவந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் யாழ்.சிறைச்சாலையில் கட்டாய தனிமைப்படுத்தில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவினைச் சேர்ந்தவர்களிடம் இருந்து அவர்கள் கஞ்சாவினை பெற்று யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தில் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 14 நாட்கள் தனிச்சிறையில் உள்ள அவர்களின் இரத்த மாதிரிகள் சில தினங்களில் எடுக்கப்பட்டு, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட கொரோனா ஆய்வுகூடத்திற்கு பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post