அரிசிகளுக்கு புதிய விலை அறிவிப்பு!! -மறினால் கடும் நடவடிக்கை என்றும் எச்சரிக்கை- - Yarl Thinakkural

அரிசிகளுக்கு புதிய விலை அறிவிப்பு!! -மறினால் கடும் நடவடிக்கை என்றும் எச்சரிக்கை-

நாட்டில் அரிசி வகைகளுக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயித்து பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த புதிய விலை நிர்ணயம் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வருவகின்றது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகார சபை விற்பனையாளர்களை எச்சரித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டரிசி குத்தரிசி ஒரு கிலோவின் அதிகூடிய சில்லறை விலையாக 90 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பா ஒரு கிலோ சிவப்பு, வெள்ளை ஒரு கிலோ 90 ரூபாயும், கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாயும், வெள்ளை, சிவப்பு நாடு ஒரு கிலோ 85 ரூபாயும் அதிகூடிய சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் கட்டுப்பாட்டை மீறும் வர்த்தகர்கள் மீது நாளை சனிக்கிழமை தொடக்கம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது.
Previous Post Next Post