புதுவருடத்திலும் கொரோனா எதிர் போராட்டம்!! -சுகாதார துறைக்கு நன்றியுடன் வாழ்த்து தெரிவித்த சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

புதுவருடத்திலும் கொரோனா எதிர் போராட்டம்!! -சுகாதார துறைக்கு நன்றியுடன் வாழ்த்து தெரிவித்த சத்தியமூர்த்தி-

வடக்கின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தாதியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினருக்கு நன்றியுடன் கூடிய புதுவருட வாழ்த்துக்களை யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்களுக்கு தனிப்பட்ட நன்றியுடன் கூடிய வாழ்த்துக்களை தெரிவித்த பணிப்பாளர், தனது முகநூலில் கொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்களுடைய புகைப்படங்களை வெளியிட்டும் நன்றி தெரிவித்துள்ளார்.Previous Post Next Post