யாழில் ஊடரங்கு தளர்த்துவதற்கான வாய்ப்பு!! -சத்தயமூர்த்தி நம்பிக்கை- - Yarl Thinakkural

யாழில் ஊடரங்கு தளர்த்துவதற்கான வாய்ப்பு!! -சத்தயமூர்த்தி நம்பிக்கை-

யாழ்ப்பாணத்தில் புதிதாக கொரோனா நோயாயிகள் எவரும் இனங்காணப்படாத நிலை தெடருமானால் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று யாழ் போதான ரைவத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழில் இதுவரை 7 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக எமது மாவட்டத்தில்  எந்த ஒரு கொரோனா நோயாளிகளும் இனம் காணப்படவில்லை. இது நமக்கு ஒரு ஆரோக்கியமான விடயம்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையை போல இன்னும் சில தினங்களுக்கு இருக்குமாயின் மத்திய சுகாதார அமைச்சும் இலங்கை அரசாங்கமும் இணைந்து யாழ்.மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று நம்புகின்றேன்.

தற்போது இருக்கின்ற நிலைமை இன்னும் சில நாட்களுக்கு தொடருமானால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த சாத்தியங்கள் இருப்பதாக நம்புகிறேன் என்றார்.
Previous Post Next Post