யாழிற்கு பஸ்சில் வந்த நீர்கொழும்பு வாசி: பல கடைகளுக்கும் சென்றாராம்!! -மேலும் பலரை தேடி வலைவீச்சு- - Yarl Thinakkural

யாழிற்கு பஸ்சில் வந்த நீர்கொழும்பு வாசி: பல கடைகளுக்கும் சென்றாராம்!! -மேலும் பலரை தேடி வலைவீச்சு-


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி யாழ்ப்பாணத்தில் இருந்த போது அவருடன் பழகியவர்களை தேடும் பணிகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.புறநகர் பகுதியனைச் சேர்ந்தவர்களையே தடும் பணிகள் அந்தந்த பொதுச் சுகாதார பரிசேதகவர்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரானாவல் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி நடந்த 7 ஆம் திகதி பேருந்தின் ஊடாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபலமான புடவை கடை ஒன்றிற்கு சென்று அங்கு, உடைகள் சிலவற்றையும் கொள்வனவு செய்துள்ளார். மேலும் சில வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கும் அவர் சென்றுள்ளார்.

மீண்டும் 9 ஆம் திகதி பேருந்திலேயே அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து நீர்கொழும்பு சென்றுள்ளார். இதனால் குறித்த வியாபார நிலையங்களில் வேலை செய்யும் யாழ்.நகர் பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது யாழின் புறநகர் பகுதிகளிலும் வசித்தவர்களுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் மேற்படிச் சம்பவங்களின் போது, பழகியவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ப்பட்டுவருகின்றன.
Previous Post Next Post