கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்ளும் நாடுகள்!! -தரவரிசையில் இலங்கைக்கு 9வது இடம்- - Yarl Thinakkural

கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்ளும் நாடுகள்!! -தரவரிசையில் இலங்கைக்கு 9வது இடம்-

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் முன்னிலை வகிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 9 ஆவது இடம் கிடைத்துள்ளது.

கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளை அவுஸ்திரேலியாவின் ICMA நிறுவனம் தரவரிசைப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசையானது கொரோனாவை தடுக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை பட்டியல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் இலங்கை 9 வது இடத்தை பெற்றுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post