முல்லைத்தீவுக்கு கொரோனா ஆபத்து!! -புத்தளத்திலிருந்து கடல்வழியாக 9 பேர் நுழைவு- - Yarl Thinakkural

முல்லைத்தீவுக்கு கொரோனா ஆபத்து!! -புத்தளத்திலிருந்து கடல்வழியாக 9 பேர் நுழைவு-

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புத்தளத்தில் இருந்து இரகசியமான முறையில் வந்த 9 பேரால் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டிருக்கும் நிலையில், படகு மூல மாக குறித்த 9 பேர் கொண்ட கும்பல் முல்லைத்தீவுக்குள் நுழைந்துள்ளது.

இவர்கள் எந்த தனிமைப்படுத்தலும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடமாடி திரிவதாக கூறும் மக்கள், புத்தளத்திலிருந்து காட்டு வழியாக திருகோணமலை சென்று

அங்கிருந்து புல்மோட்டை சென்று கடல் வழியாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதி ஊடாக மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக பொலிஸாருக்கு கூறப்பட்ட நிலையில் தனி மைப்படுதலில் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஆனாலும் அவர்கள் கொக்கிளாய் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதுடன், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் சுதந்திரமாக நடமாடி திரிவதாக மக்கள் கூறுகின்றனர்.

மேலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மாவட்டங்களுக்கிடையில் அதுவும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள புத்தளம் பகுதியிலிருந்து முல்லைத்தீவுக்குள்

குறித்த நபர்கள் நுழைந்துள்ளமையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பேராபத்து ஏற்படலாம்.
Previous Post Next Post