93 மாணவர்களுடன் நேபாளில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானம்!! - Yarl Thinakkural

93 மாணவர்களுடன் நேபாளில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானம்!!

நேபாள் நாட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் செய்யப்பட்ட பகுதிகளில் சிக்குண்ட 93 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3.27 இற்கு யூஎல் 1425 என்ற விமானத்தின் மூலம் அவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 8 மணிக்கு நேபாளின் காத்மண்டு விமான நிலையத்தினை நோக்கி குறித்த விமானம் புறப்பட்டதோடு அங்கிருந்து பிற்பகல் ஒரு மணியளவில் இற்கு அங்கிருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தியாவில் மும்பையில் சிக்குண்டுள்ள மாணவர்களை தாயகம் அழைத்து வர விசேட விமானம் ஒன்று நாளைய தினம் இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post