கொரோனாவா? யாழ்.போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதி!! - Yarl Thinakkural

கொரோனாவா? யாழ்.போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதி!!

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று 6 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இன்று பிற்பகல் அந்த பரிசோதணை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது.

அதன்படி அந்த 6 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய மாதிரிகளும் பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.
Previous Post Next Post