யாழிற்கு கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ள 7 பேர்!! -அரச அதிபர் தகவல்- - Yarl Thinakkural

யாழிற்கு கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ள 7 பேர்!! -அரச அதிபர் தகவல்-

நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்றின் அபாய வலயமாக உள்ள கொழும்பில் இருந்து 7 பேர் தப்பிவந்து யாழ்ப்பாணத்தில் ஒழிந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று ஒரு சில ஊடகங்களை அழைத்து அவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இவ்வாறு கொழும்பில் இருந்து தப்பி வந்து சங்கானை மற்றும் தொல்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாகவே அடையாளம் காணப்பட்டு வலி.மேற்கு பிரதேச சுகாதார பிரிவினரால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை போன்று பகுதிகளில் சென்று ஒழிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

எமக்கு கிடைத்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மிக விரையில் அவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும். அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Previous Post Next Post