6 பேருக்கு இன்று கொரோனா பரிசோதணை!! -யாருக்கும் தொற்றில்லை: சத்தியமூர்த்தி தகவல்- - Yarl Thinakkural

6 பேருக்கு இன்று கொரோனா பரிசோதணை!! -யாருக்கும் தொற்றில்லை: சத்தியமூர்த்தி தகவல்-

கெரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இன்று 6 பேருக்கு ஆய்வுகூட பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர்களில் எவருக்கும் மேற்படி பரிசோதணையின் முடிவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார். யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோன சிகிச்சை விடுதியில் 3 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் அரியாலையில் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார் என்ற என்ற காரணத்தினால் கிளிநொச்சியில் இருவரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் அவரவர் வீடுகளில் கட்டாய சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் இன்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ ஆய்வுகூட பரிசோதணை மேற்கொள்ளப்பட்டன.

இந்த பரிசோதணை முடிவில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post