வெளவால்களால் பரவும் 6 வகை புதிய கொரோனா வைரஸ்!! -விஞ்ஞானகள் எச்சரிக்கை- - Yarl Thinakkural

வெளவால்களால் பரவும் 6 வகை புதிய கொரோனா வைரஸ்!! -விஞ்ஞானகள் எச்சரிக்கை-

மியான்மரில் இதுவரையில் கொரோனா வைரஸ் வகை சார்நத் 6 புதிய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மியான்மரில் 3 வகையான வெளவால்களின் ஊடாகவே இந்த புதிய வகையான 6 வித வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

CoVID-19 வைரஸிலிருந்து தோன்றிய SARS-CoV-2  வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த 6 புதிய வைரஸ் விகாரங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த புதிய வைரஸ்கள் உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுடன் மரபணு ரீதியாக இணைக்கப்படவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ்கள் மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவக்கூடிய ஆபத்து உள்ளனவா என்பது தொடர்பில் இன்னும் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
Previous Post Next Post