யாழ் உள்ளிட்ட 6 இடர் பகுதிகளுக்கு தொடர் ஊடரங்கு!! -ஏனைய இடங்களில் நாளை மறுதினம் தளர்வு- - Yarl Thinakkural

யாழ் உள்ளிட்ட 6 இடர் பகுதிகளுக்கு தொடர் ஊடரங்கு!! -ஏனைய இடங்களில் நாளை மறுதினம் தளர்வு-

நாட்டில் இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல் வரும்வரையில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post