கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் பாரிய கொரோனா அச்சம்!! -62 பேருக்கு தொற்று உறுதி- - Yarl Thinakkural

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் பாரிய கொரோனா அச்சம்!! -62 பேருக்கு தொற்று உறுதி-

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் இதுவரை 62 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த பாகுதியில் தற்போது எழுந்துள்ள கொரோனா தொடர்பான பாரிய அச்சம் காரணமாக பண்டாரநாயக்க மாவத்தையும், அதனை சூழவுள்ள ஆமர் வீதியை ஒட்டியுள்ள பகுதிகளும், வாழைத்தோட்டம் , புதுக் கடை பகுதியுடன் தொடர்புபடும் பகுதிகள் அனைத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. 

சுகாதார  அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 242 குடும்பங்களைச் சேர்ந்த  1010 பேர் மூன்று தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பட்டதாக , கொழும்பு  மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தகவல் தெரிவித்துள்ளார். 
Previous Post Next Post