கொரோனாவிலிருந்து மீண்ட 61 பேர்!! -இன்றும் இருவர் நலமடைந்தனர்- - Yarl Thinakkural

கொரோனாவிலிருந்து மீண்ட 61 பேர்!! -இன்றும் இருவர் நலமடைந்தனர்-

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் குணமடைந்தவர்களின் தொகை 61 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளதுடன், அதில் 152 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post