யாழில் கொரோனா சிகிச்சைக்கு உதவி!! -5 இலட்சம் வழங்கி வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் முன்னுதாரணம்- - Yarl Thinakkural

யாழில் கொரோனா சிகிச்சைக்கு உதவி!! -5 இலட்சம் வழங்கி வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் முன்னுதாரணம்-

வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய நிர்வாகம் தாமாக முன்வந்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு 5 இலட்மசம் ரூபாவினை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திவரரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும்பரவத்தொடங்கி, யாழ்.மாவட்டத்திலும் 7 பேரை தாக்கியுள்ளது.

இதனால் யாழ்.மாவட்டத்திற்கு தொடர்ச்சியான ஊடரங்கு அறிவிக்கப்பட்டதுடன், யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா சிகிச்சை விடுதி அமைக்கப்பட்டு, பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாமாக முன்வந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை விடுதிக்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு குறித்த ஆலய நிர்வாகம் தனது பங்களிப்பாக 5 இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை ஆலயத்தில் வைத்து, யாழ்.போதனா வைத்திய சாலையின் நிர்வாகத்தினரிடம் குறித்த நிதி கையளிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post